நிலத் தகராறு, தம்பதியினர் வெட்டிக்கொலை
(LBC தமிழ்) அம்பலாந்தோட்டை பொலன ருஹுனு ரிதிகம 3ஆம் மைல் பகுதியில் வீடொன்றினுள் தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபரின் மைத்துனர் சந்தேகத்தின் பேரில் அம்பலாந்தோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தம்பதியை தாக்கி இரட்டை கொலையை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் 61 வயதுடைய ஆண் மற்றும் 56 வயதுடைய மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த நிலத்தகராறு இந்த இரட்டை கொலைக்கு காரணமென காவல்துறையினர் தெரிவித்தனர்.