இந்த ஆண்டு முதல் இலங்கையர்களுக்கு இ-பாஸ்போர்ட்
(LBC தமிழ்) இந்த ஆண்டு முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
பயோடேட்டா தகவல்கள் அடங்கிய மின்னணு அட்டை (சிப்) ஒன்று புதிய பாஸ்போர்ட்டில் சேர்க்கப்படும் எனவும், இந்த முறையை உலகின் பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், தலைமை அலுவலகம் மற்றும் தற்போதுள்ள நான்கு பிரதான கிளைகள் தவிர்ந்த 54 கிளைகள் நாடு முழுவதும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்தார்.