1985 கொலை வழக்கில் மரண தண்டனை கைதி 14 ஆண்டுகளின் பின் விடுதலை
1985ஆம் ஆண்டு அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் 14 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
14 வருடங்களாக நடத்தப்பட்ட ஜூரி விசாரணையைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதியை விடுவித்துள்ளது.
1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி அக்கரைப்பற்றில் நபர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டி பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
ஜூரி விசாரணையின் முடிவில், பிரதிவாதிக்கு 10 ஜூன் 2009 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், தீர்ப்பை ரத்து செய்து அவரை விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தை கோரி பிரதிவாதி மேன்முறையீடு செய்திருந்தார்.
14 வருட ஜூரி விசாரணையின் பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய குழு, பிரதிவாதியை விடுதலை செய்தது.