தேசிய பொங்கல் போராட்டம், போராட்டக்காரர்கள் மீதான வழக்கு ஒத்திவைப்பு

தேசிய பொங்கல் விழாவின் போது ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடாத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க செயலாளரும், பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அத்தோடு பொலிஸ்நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் மேலும் ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.