தாழமுக்கம் இன்று நாட்டுக்குள் நுழையுமென எதிர்வுகூறல்
தென்மேற்கு வங்காள வரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 180 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நேற்றிரவு நிலைகொண்டிருந்தது .
இது மேற்கு , தென்மேற்கு திசையாக நோக்கி நோக்கி நகர்ந்து இன்று ( 1 ) காலை இலங்கையின் கிழக்குக் கரையை அடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது .
எனவே , நாட்டில் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் , அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது .
வடக்கு , வடமத்திய , வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான மிக பலத்த மழை பெய்யக் கூடும் . அதேவேளை வடக்கு , வடமத்திய , கிழக்கு , வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த காற்று வீசக்கூடும் .
சில சமயங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றராக காணப்படும் . இதேவேளை , நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் .
இடியுடனான மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது .