உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையம் முன்பு போராட்டம்
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அறிவித்தபடி தேர்தலை நடத்த வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷமிட்டபடியும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.