அநுரவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் சஜித்தின் சகோதரி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி ஜெயக்கொடி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு ஜெயக்கொடிசம்பந்தப்பட்ட நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துலாஞ்சலி ஜயக்கொடியின் சட்டத்தரணி விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“வியாபார பரிவர்த்தனைக்குப் பதிலாக சட்டவிரோதமாக போலி நாணயங்களை அச்சடித்து அவற்றை துலாஞ்சலி ஜெயக்கொடியிடம் ஒப்படைத்ததாக 2017 மே மாதம் தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பொதுமக்களின் கருத்தைக் கையாளும் நோக்கில், மேற்படி சம்பவம் தொடர்பில் சமூக ஊடக தளங்களில் தவறான தகவல்கள் மற்றும் அவதூறான அறிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க பரப்பி வருவதாகவும் அக் கடிதத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், அவதூறான அறிக்கைகளுக்காக அநுரவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க துலாஞ்சலி ஜெயக்கொடி உத்தேசித்துள்ளதாக அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.