முள்ளிவாய்க்காலில் திரண்ட தமிழர்கள்
14 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, சரியாக காலை 10.30மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் தனது 13 உறவினர்களை இழந்த தமிழ் பெண் பிரதான பொதுச்சுடரை ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்தார்.
ஆயுதப் போரின் இறுதி நாட்களில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாக நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் தங்களின் அன்புக்குரியவர்களின் நினைவாக தென்னை மரக்கன்றுகளை நட்டனர்.