14ம் ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல், நந்திக்கடலில் மலரஞ்சலி
தமிழ் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் நந்திக்கடலில் இன்று காலை மலர்கள் தூவப்பட்டன.
“தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மௌன சாட்சியாக இருக்கும் நந்திக்கடல் எங்கள் உறவினர்களின் கண்ணீரும் இரத்தமும் அடங்கியுள்ளது” என ரவிகரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.