தமிழ் இனப்படுகொலையை நினைவுகூர்ந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள்

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முள்ளிவாய்க்கால் தமிழர் நினைவேந்தல் தினத்தை நினைவுகூர்வதற்காக வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் ஒன்று கூடினர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையில்  உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் தமது செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதுடன் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPG-T) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிடுதல், காணொளி காட்சிப்படுத்தல் மற்றும் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.