IMFஐ விட இந்தியா இலங்கைக்கு அதிக உதவி செய்தது – ஜெய்சங்கர்
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு செய்த உதவியிலும் பார்க்க நாங்களே (இந்தியாவே) இலங்கைக்கு அதிக உதவிகளை செய்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மோடி அரசாங்கமானது, இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகள், வளைகுடா நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கி “விரிவாக்கப்பட்ட சுற்றுப்புறத்தை” உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
“கடந்த ஆண்டு இலங்கை மிகவும் ஆழமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, நாமே முன்னெப்போதும் செய்யாத வகையில் உதவினோம்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு செய்ததை விட இலங்கைக்கு நாம் செய்தது பெரியது. உங்களில் எவரேனும் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தால், இந்த நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நீங்கள் காணலாம், ”எனவும் அவர் தெரிவித்தார்.