மஹியங்கனை தலத்தை புனித வழிபாட்டுத் தலமாக ஜனாதிபதி பிரகடனம்
வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை தலத்தை உத்தியோகபூர்வ வழிபாட்டுத் தலமாக அறிவிக்கும் பிரகடனத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.
மஹியங்கனை புனித ஸ்தலத்திற்கு விஜயம் செய்த இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (28) பிற்பகல் அதன் மறுசீரமைப்புப் பணிகளில் பங்கேற்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, விதுர விக்கிரமநாயக்க, இராஜாங்க அமைச்சர் தெனுகா விதானகமகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.