முல்லேரியாவில் குழந்தை உயிரிழப்பு, 51 வயது நபர் கைது

முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் 05 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக 51 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அருகில் இருந்த புல் வெட்டும் தொழிலாளி என சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

முல்லேரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து முல்லேரிய பொலிசார் சடலத்தை கண்டெடுத்த நிலையில், உடைந்த போத்தலினால் ஏற்பட்ட கண்ணாடி துண்டுகளினால் ஏற்பட்ட காயங்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பெற்றோர் பிரிந்து தாய் வெளிநாட்டில் தொழில் செய்து வருவதால், குழந்தை தாத்தா பாட்டியின் பாதுகாப்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தையின் வயிற்றில் கூர்மையான பொருளின் தாக்கம் ஏற்பட்டதால் இரத்தம் கசிந்ததன் காரணமாக குழந்தையின் மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.