மோடி – ரணில் சந்திப்பு பற்றி தமிழ் எம்.பிக்களுக்கு விளக்கம் கொடுத்தார் இந்திய தூதர்
(Lankasri LBC Tamil News) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜூலை21 நடந்த பேச்சுக்களில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியத் தூதர் கோபால் பாக்லே வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று விளக்கினார்.
கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த தூதுவர், பாரதப் பிரதமரால் இலங்கை ஜனாதிபதியிடம் 13 ஐ முழுமையாக அமுல்படுத்தல். உடனடியாக மாகாண சபை தேர்தல் நடத்துதல் மற்றும் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு, தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்பன வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதிகளுடனான சந்திப்பில் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்கிலேயும் கலந்து கொண்டிருந்தார். நேற்றைய சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன். சுமந்திரன், சிறிதரன். சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
LBC Tamil News