குருந்தூரில் பொங்குவதற்கு எதிராக செயற்படோம் – தொல்லியல் திணைக்களம்
நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூரில் கட்டட நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டமைக்காக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(08) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின் சட்டத்தரணி தனஞ்சயன் இது தொடர்பில் தெரிவித்ததாவது,
குருந்தூர்மலை வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது.
ஆதி ஐயனார் ஆலயத்தில் பொங்கல் உற்சவத்தினை செய்வதற்கு முற்பட்ட போது தொல்லியல் திணைக்களத்தாலும், சகோதரமொழி பேசுபவர்களாலும் தடுக்கப்பட்து. இதனை நகர்த்தல் பத்திரம் ஊடாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்.
இது தொடர்பாக தொல்லியல் திணைக்களம் பதிலளிப்பதற்கு தவணை வழங்கப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி ஊடாக தொல்லியல் திணைக்களத்தினர் தோன்றியிருந்தனர்.
16 அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளோம்! ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அறிவிப்பு!
இந்நிலையில், அங்கே சைவமக்கள் பொங்கல் பொங்கி வழிபடுவதற்கு எந்த விதத்திலும் நாங்கள் தடை இல்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு எதிராக நடக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
இந்த வழக்கானது மேலதிக கட்டளைக்காக எதிர்வரும் 31.08.2023க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.