14 வயது சிறுமியோடு உறவு கொண்ட அத்தான்: நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

வவுனியாவில் மனைவியின் சகோதரி குழந்தை பெற காரணமாக இருந்த அத்தானுக்கு கடூழிய சிறை தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். இச் சம்பவம் 2013 வைகாசி மாதம் இடம்பெற்றுள்ளது.

சிறுமிக்கு 14 வயதாக இருக்கும் போது, அக்காவின் கணவரால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார்.  குறித்த சிறுமிக்கு பிறந்த குழந்தையின் மரபணு பரிசோதனையில் (DNA) சகோதரியின் கணவரே இதற்கு காரணமென இரசாயன பகுப்பாய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.

பாலியல் குற்றம் புரிந்ததாக சட்டமா அதிபரினால் குற்றபத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிறுமி சாட்சியம் அளித்த சந்தர்ப்பத்தில் DNA அறிக்கை நீதிமன்றில் இலக்கமிடப்பட்ட போது எதிரி குற்றத்தை ஏற்று தானே குற்றவாளி என மன்றுக்கு தெரிவித்தார்.

இந்நிலையில் இரு குற்றங்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறையும், ஆறு இலட்சம் ரூபா நட்டஈடு கட்ட வேண்டும் எனவும் அதனை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறையும் 6000 ரூபா தண்டப்பணமும் கட்டத்தவறும் பட்சத்தில் இரு மாத கடூழிய சிறையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்தோடு குழந்தையின் பிறப்பத்தாட்சி பத்திரத்தில் தந்தையின் பெயராக எதிரியின் பெயரை இடுவதற்கு எதிரி மறுத்து வருவதாகவும் அதனால் பிறப்பத்தாட்சி பத்திரம் பதிய முடியவில்லை எனவும் அரச சட்டவாதி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வநதார்.

இந்த நிலையில் எதிரியின் பெயரை தந்தையின் பெயர் வர வேண்டிய இடத்தில் பெயரிடுமாறு பிரதேச செயலாளருக்கு நீதிபதி இளஞ்செழியன் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் தனது சகோதரிக்கு நடந்த அநீதியை அடுத்து கணவனை விட்டு மனைவி (பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்கா) பிரிந்து சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.