ஹர்த்தாலை முன்னெடுக்க ஆதரவு தாருங்கள் – தமிழ் கட்சிகள் வேண்டுகோள்

“தமிழ்பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், அடக்குமுறைகளைக் கண்டித்தும் எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு – கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து இந்த ஹர்த்தாலைப் பெருமெடுப்பில் மேற்கொள்ளுவதற்கு வடக்கு – கிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினருடைய முழுமையான ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.”

இவ்வாறு ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் யாழ். இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதன் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.