யாழில் மனைவியுடன் தம்பி உறவு, அடித்து கொலை செய்ய இதுவே காரணம்!!
தனது சகோதரருடன் மனைவி தவறான தொடர்பு வைத்திருப்பதை அறிந்து ஆத்திரமடைந்தமையால் இருவரையும் தாக்கியாதாக கைதான கணவர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கணவன், மனைவிக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம், சண்டையாக மாறியது.
பனம்மட்டையால் கணவன் அடித்ததில் மனைவியின் தலையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
மயக்கமடைந்த தன் மனைவியை கணவன் மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று (15) இரவு அனுமதித்துள்ளார். குறித்த பெண் இன்று காலையிலேயே வைத்தியசாலையில் உயரிழந்துள்ளார். இது தான் நடந்த உண்மைச் சம்பவம்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை இன்று காலையில் பார்க்கச் சென்ற கணவர், சின்னக்கடைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதன் போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே ”மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதால் இருவரையும் தாக்கியதாக தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதுடன் வேறு சில குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவராகவும் கருதப்படுகிறார்.உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு தொடர்பான விபரங்கள் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை மற்றும் சட்ட மருத்துவ அறிக்கை மேற்கொண்டதன் பின்னரே தெரியவரும்.
சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்காகிய சகோதரரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.