கொழும்பில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்! (Photo)
கொழும்பு ராகமையை சேர்ந்த பெண் ஒருவர் காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார்.
தற்போது 6 குழந்தைகளும் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சமன் குமார தெரிவித்தார்.
அவர்களில் ஐவர் தற்போது காசல் வைத்தியசாலையிலும் ஒரு குழந்தை கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.