முல்லைத்தீவு தாயின் இரண்டாவது கணவனால் 13 வயது சிறுமி கர்ப்பம், மூவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட குமுழமுனை பகுதியில் 13 வயது சிறுமியை சட்டவிரோத கருக்கலைப்புக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் உட்பட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த வருட இறுதியில் தாயின் 2வது கணவனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி கர்ப்பம் தரித்ததாக் கூறப்படுகின்றது. இந் நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருந்தகத்தில் வைத்து சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து சிறுமியின் தாய், தாயின் இரண்டாவது கணவன் மற்றும் மருந்தக உரிமையாளர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.