எயிட்ஸ் நோயாளர்கள் யாழில் அதிகரிப்பு!
போதைப்பொருள் பாவனையாவது யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளையால் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வட பிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை வைத்திய நிபுணர் றொகான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகளவான போதைப் பொருள் பாவணையாளர்கள் போதைப் பொருள் ஊசிகளை உடலில் ஏற்றுகின்றனர் இதனால் எய்ட்ஸ் போன்ற தொற்றுநோய் பரவுவதற்கான அபாயம் காணப்படுகிறது
யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்தில் மூன்று பேரும் இந்த வருடத்தில் நான்கு பேரும் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
மொத்தமாக 65 எய்ட்ஸ் நோயாளர்கள் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அவர்களுக்கான சிகிச்சைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் வழங்கப்பட்டு வருகின்றது என்றார்.