முள்ளிவாய்க்கால் சோக சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்பி!

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தினால் 2009ம் ஆண்டு இனப்படுகொலை செய்யப்பட்டதற்காக மாண்புமிகு தமிழ் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் மன்னிப்பு கேட்டதாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் மன்னிப்பு கேட்டதாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்

எந்த வரலாற்று நபருடன் உணவருந்துவதற்கு ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்வி திமுக எம்பி தமிழச்சியிடம் கேட்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ் தேசிய தலைவர் என்று குறிப்பிட்டு மேதகு தேசியத் தலைவர் பிரபாகரன் என்று பதிலளித்தார்.

நான் மன்னிப்பு கேட்கின்றேன் அந்த முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற சோகத்திற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஐக்கிய நாடுகள் சபை மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் மற்றும் உலக வங்கி தரவு உட்பட பல ஆதாரங்களை ஆய்வு செய்ததன் மூலம் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி கட்ட போரின்போது கொல்லப்பட்டவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 169ஆயிரத்து 796 ஆக இருக்கலாம் என சர்வதேச உரிமை மற்றும் நீதி திட்டம் கண்டறிந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு இந்திய பொது தேர்தலில் தமிழச்சி மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். எனினும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்றபோது திமுகவே  அப்போது ஆட்சியில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.