ரணிலின் ஆலாசனைக்கு இருபத்தி இரண்டு இலட்சமாம்
ஜனாதிபதி ரணிலிற்கு ஆலோசகர்களாக பணியாற்றும் 15 பேருக்கான மாத செலவு 22 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தால் பாராளுமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுப்பனவுகள் உட்பட இவ்வாறு செலுத்தப்பட்ட தொகை இருபத்தி ஒரு இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தேழு ரூபாயாகும்.
பொருளாதார நிலைப்படுத்தல், மீட்சி மற்றும் வளர்சி ஆகிய ஆலோசகருக்கு 3இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், ஊடகம் மற்றும் தொடர்பாடல் ஆலோசகருக்கு 2 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாவும், விஞ்ஞான விவகார ஆலோசகருக்கு 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகிறது.
இதில் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு பெண் உறுப்பினரும் அடங்குகின்றனர். இந்த மூவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியமும் கிடைக்கின்றது.
ஜனாதிபதியின் ஆலோசகர்களாக 23 பேர் உள்ளனர். அவர்களில் எட்டு பேர் சம்பளம் அல்லது கொடுப்பனவுகள் இல்லாமல் சேவை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.