தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு – யாழில் துயரம்
பிறந்து 26 நாட்களே ஆன குழந்தை ஒன்று நேற்று முன்தினம் தாய்ப்பால் குடிக்கும் போது பால் புரைக்கேறி உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது
கொடிகாமம் விரிசுவில் பகுதியைச் சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தாய்ப்பால் குடிக்கும் போது, பால் புரைக்கேறியமையினால், சுவாச குழாய்க்குள் சென்றதால் , மரணம் சம்பவித்ததாக மரண விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.