பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் விளைவித்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பிணை
யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் வகையில் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை பிணையில் செல்வதற்கு நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
யாழ் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர், கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்றார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் சாட்சியம் அளிப்பதற்காக வந்திருந்தார்.
இதன்போது நீதிமன்ற நடவடிக்கைளை குழப்பும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் , கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்வதற்கு மன்று அனுமதித்துள்ளதுடன் , எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.