கோயில் கட்டுகிறார் புத்த சாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க!

(LBC Tamil News) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற இனவாத முரண்பாடுகளுக்கு புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவே கதாநாயகன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சாடியுள்ளார்.

புத்தசாசனம் அமைச்சர் கடும் இனவாதி, தமிழர்களின் மரபுரிமைகளை அளிப்பதே இவர் நோக்கமாக கொண்டுள்ளார், தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தை பதவி விலக்கியதற்கு பதிலாக விதுர விக்கிரமநாயக்கவை பதவியில் இருந்து விலக்கியிருக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விதுர விக்கிரமநாயக்க இப்போதைய அரசில் புத்தசாசன அமைச்சராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழர்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை, புறக்கணிக்க போவதுமில்லை என புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

LBC Tamil News

“பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை ஏனைய மதங்களை இரண்டாம் பட்சமாக்க வேண்டும் என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொன்மை வாய்ந்த இந்து கோயில்களை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்து மத விவகாரங்கள் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்து மத கலாசாரத்தையும், மத சின்னங்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” எனவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நீங்கள் வாசிக்க தவறிய LBC Tamil News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.