மின்சார முடக்கம்: இரு விசாரணைகள்?
தீவகம் தவிர்ந்த நாடளாவிய ரீதியில் மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன இரு தனித்தனியாக விசாரணைகள் நடத்த உள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மின்தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் இருந்து விரிவான அறிக்கை ஒன்று கோரப்பட உள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணை குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.