யாழ்.பல்கலை மாணவனிடம் ரி.ஐ.டி 3 மணிநேர விசாரணை!
யாழ் பல்கலைக்கழக மாணவனும் கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் உப தலைவருமான இராசரத்தினம் தர்சனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்று திங்கட்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு (2022) யாழ்ப்பாணப்பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டபோது புலிகளின் பாடல் இசைக்கபட்டமை மற்றும் மாணவர் ஒன்றிய செயற்பாடுகள், வடக்கு கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றிய செயற்பாடுகள் தொடர்பிலேயே விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
சுமார் 3 மணித்தியாலத்திற்கும் மேலாக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வருகிறது.
இ.தர்சன் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பத்திரிகை ஒன்றில் ஊடகவியாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.