யாழில் 86 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு – Jaffna News
(Jaffna News) யாழ்ப்பாணத்தில் 86 கோடியே 45 இலட்ச ரூபாய் போதைப்பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மூன்று பொதிகள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அந்த பொதிகளை சோதனை செய்தனர்.
அதில் இருந்து 48 கிலோ நிறை கொண்ட அபின் போதைப்பொருளும், 28 கிலோ நிறை கொண்ட கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டது.கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி
86 கோடி ரூபாய் எனவும் கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வடமாகாணத்தில் அபின் போதைப்பொருள் பாரியளவில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- யாழ்ப்பாணத்தில் 16 வயது சிறுமியை கடத்தி சென்ற 3 பிள்ளைகளின் தந்தை! தகவல் வழங்கினால் ஐந்து இலட்சம் சன்மானம்!
- யாழ் குடாரப்பில் கரையொதுங்கிய புத்த தொப்பம் : உண்மை நிலவரம் என்ன?