37 வருடங்களின் பின் மீள உருவாகியது ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம்!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை  சட்டத்தரணிகள் சங்கம் 37 வருடங்களின் பின்  மீள உருவாகியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடமாகாண உப தலைவர்  பா. தவபாலன் தலைமையில் நேற்று புதன்கிழமை நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

இதன்போது முன்னாள் நீதிபதி சரோஜினி இளங்கோவன் தலைவராக ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஏனைய நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக 1987ஆம் ஆண்டிற்கு பின்னர் செயலிழந்து காணப்பட்ட நிலையில் 37 வருடங்களின் பின் நேற்றைய தினம் ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் மீள் உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.