சாய்ந்தமருது மாணவனின் மர்ம உயிரிழப்பு, அழிக்கப்பட்ட CCTV காட்சிகள் மீட்பு!

சாய்ந்தமருது மாணவனின் மர்ம உயிரிழப்பு, அழிக்கப்பட்ட CCTV காட்சிகள் மீட்பு!மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (18) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் உட்பட  ஏனைய தரப்பினரின்  விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதன் போது பாதிக்கபட்ட சிறுவனின் குடும்பம் மற்றும் சாய்ந்தமருது மரைக்காயர் சபை இ ஜம்யதுள் உலமா சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷஃபி எச் இஸ்மாயில் ஆஜராகி இருந்தார்.

குறித்த வழக்கினை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய நீதிமன்ற உத்தியோகத்தர் முபாறக் நெறிப்படுத்தி இருந்தார்.

இதன் போது சம்பவ தினமன்று மத்ரஸாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராவில் சேமிக்கப்பட்டிருந்த காணொளிகள் சந்தேக நபரான மௌலவியின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்ட நிலையில் கடந்த நீதிமன்ற தவணைகளில் பொலிஸாரினால் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதற்கமைய நீதிவான் அரச இரசாயண பகுப்பாய்விற்கு அனுப்பி அழிக்கப்பட்டதாக கூறப்படும் காணொளிகளை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கமைய அழிக்கப்பட்ட காணொளிகள் மீட்கப்பட்டுள்ளதாக மன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய சமர்ப்பணங்கள் பொலிஸார் மன்றில் சமர்ப்பித்து குறித்த சிசிடிவி காணொளி அறிக்கையை மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

எனவே எதிர்வரும் நீதிமன்ற தவணைகளில் மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் அழிக்கப்பட்ட சிசிடிவி காணொளிகள் ஆதாரமாக பெறப்பட்டு மாணவனின் மர்ம மரணத்தின் உண்மை நிலையை காட்ட உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.