கம்பஹாவில் பௌத்த பிக்கு சுட்டு கொலை!

கம்பஹா மல்வத்து ஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் T-56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கம்பஹா ஷனாராம மகா விகாரையில் சேவையாற்றி வந்த தம்ம ரத்தன என்ற 45 வயதுடைய தேரரே இந்த சம்பவத்தில் பலியானார்.

மகிழுந்தில் வந்த இனந்தெரியாத நால்வர் பிக்குவை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சூட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பிக்கு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.