எலோன் மஸ்கை அமெரிக்க அரசினால் கட்டுப்படுத்த முடியாது, மொட்டுவின் மொட்டை சொல்வது என்ன?
எதிர்வரும் 5 வருடங்களில் சமூக ஊடக தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும் எனவும் மக்கள் இறைமையின் அடிப்படையில் இயங்கும் அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவிற்கு இந்த கருவி பயன்படுத்தப்பட்டால் அதில் சிக்கல் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
மக்கள் வாக்களிப்பதன் மூலம் அரசாங்கத்தை தெரிவு செய்த பின்னர் அந்த அரசாங்கத்தை அவதூறாகப் பேசி மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி மக்களின் இறையாண்மைக்கு சவால் விடுவார்களாயின் அது எதிர்காலத்தில் பெரும் சவாலாக அமையும்.
கட்டுப்பாடு மற்றும் அடக்குமுறை இரண்டு சூழ்நிலைகள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்களின் பேச்சு சுதந்திரத்தை பறிப்பதாக பல்வேறு நபர்களின் பொய் பிரசாரங்களுக்கு மக்கள் வீழ்ந்து விட வேண்டாம் எனவும் மக்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
எலான் மஸ்க்கை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியவில்லை .. அவர் இப்போது ஒரு நாட்டின் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தை விட சக்திவாய்ந்தவராகிவிட்டார்.
அவரது சமூக ஊடக தளமான X தற்போது சமூகப் பாதைகளை மாற்றுவதில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது” என்று மேலும் அரசாங்க தரப்பு எம்.பி. இலங்கை ஏன் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துகிறது என்பதை நியாயப்படுத்தினார்.