கை மீறி போனதா யாழ்ப்பாணம்? கட்டுப்பாட்டிற்குள் இல்லை!
இலங்கை போதைபொருள் வியாபாரிகளை வேட்டையாடுவதாக நாடகங்களை அரங்கேற்றிவருவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகின்றன.குறிப்பாக கைதுகள் ஆயிரக்கணக்கில் முன்னெடுக்கப்படுகின்ற போதும் கைப்பற்றப்படுகின்ற போதைப்பொருட்கள் எங்கேயென கேள்விகள் எழுந்துள்ளன.
இதனிடையே யாழ்ப்பாணம் நகரை அண்டிய கலட்டி பகுதியில், போதைப்பொருளை அதீத அளவு நுகர்ந்த இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , உடற்கூற்று பரிசோதனையில் இளைஞன் போதைப்பொருளை அதீத அளவு நுகர்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பகுதியில் மற்றுமொரு இளைஞன் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பயன்பாட்டினால் இளம் சமூகத்திடையே மரணங்கள் அதிகரித்துள்ளது.