பஸ் கட்டணத்தை உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை!
தொடர் டீசல் விலை அதிகரிப்பால் பஸ் கட்டணத்தை உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனியார் பஸ் சங்கம் சார்பில் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் திரு. அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.
முன்னர்தாக ஒரு லிட்டர் டீசலின் விலை 29 ரூபாவினால் உயர்த்தப்பட்டது. இந்நிலையின் நேற்று மீண்டும் 5 ரூபாவினால் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக பஸ் கட்டணம் அதிகரிக்க வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இரு வாரங்களுற்குள் பஸ் கட்டணத்தை நிச்சயம் அதிகரிப்போம். இதன்போது குறைந்தபட்ச பஸ் கட்டணம் 35 ரூபாயாக இருக்கும். இதனை கட்டாயப்படுத்தி செய்வோம்.”
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இப்போதைக்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
VAT தாக்கம் மற்றும் எரிபொருள் கட்டண அதிகரிப்பு காரணமாக கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் திரு.ஏ.எச்.ருவன் பிரசாத் தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலும் நாங்கள் கட்டணங்களை அதிகரிக்க மாட்டோமென அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் திரு.லலித் தர்மசேகர தெரிவித்தார்.