டயானாவின் முயற்சி வெற்றி, கஞ்சாவுக்கு அமைச்சரவை அனுமதி, விபசாரத்திற்கு அனுமதி எப்போது?
இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்வது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் இதே இராஜாங்க அமைச்சர் இலங்கையில் கஞ்சா பயிர்செய்கை மற்றும் விபச்சாரத்தை சட்ட பூர்வமாக அனுமதிக்க வேண்டும் எனும் கருத்தினை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
பௌத்த நாடான தாய்லாந்தில் விபச்சாரம் சட்டபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவோ எனவே இலங்கையிலும் விபச்சாரத்தினை சட்டபூர்வமாக அனுமதிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இப்போது கஞ்சா பயிர் செய்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயல்திட்டங்களை இலங்கை முதலீட்டுச் சபையின் ஊடாக மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அதற்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் டொலரில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில காலங்கள் போக விபச்சாரத்திற்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.