யாழில் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி, எதற்காக ஒட்டினார்கள்?
ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் – முற்றவெளியில் இடம்பெற்றது.
இதில் பிரபல பாடகர் ஹரிஹரன், நடிகை தம்மன்னா, நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து பாடல்களை பாடி நகைச்சுவைகளை அடித்து, ஆட்டங்கள் போட்டு சிறப்பித்தனர்.
இதன்போது இலவச பார்வையாளர்கள்கள் முன்னறங்க தடைகளை உடைத்து 3000ரூபா ரிக்கேட் பார்வையாளர்களின் பகுதிக்குள் முன்னேறினார்கள்.
பின் 3000 ரூபா பகுதிக்குள் இருந்து 7000ரூபா ரிக்கேட் பார்வையாளர்களின் பகுதிக்குள் முன்னேறி 25000ரூபா ரிக்கேட் பகுதிக்குள் முன்னேற முயற்சித்த போது அமைதி இன்மை ஏற்பட்டு ஒரு மணித்தியாலத்தில் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
அந்த நிகழ்வு நிறைவு பெற்றதை அடுத்து இன்று காலை தென்னிந்திய பிரபல நடன பயிற்றுவிப்பாளரான கலா மாஸ்டரிற்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் யாழ்ப்பாணம் – வல்லை சந்தி பயணிகள் நிழல் குடைக்குள் ஒட்டப்பட்டு இருந்தது.