செயற்கை சுவாசம் இன்றி கெஹலியவால் தூங்க முடியாது
தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேருக்கும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி 02ம் திகதி கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பெப்ரவரி 03ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இன்று வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது.
இதே நேரம் கெஹலிய ரக்புக்வெல்ல பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாக அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும்,அவர் sleep apnea நோயினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவர் உறங்கும் போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் அப்போது அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக அவருக்கு பிணை வழங்குமாறு கெஹலிய சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார். இதனை செவிமடுத்த நீதிபதி அவருக்கு பிணை வழங்குவதை நிராகரித்து முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, முன்னாள் செயலாளர் உள்ளிட்டு மேலும் 6 பேருக்கும் பெப்ரவரி 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நேற்று (15) உத்தரவிட்டார்.