முதலில் பொது தேர்தல் இல்லை, ஜனாதிபதி தேர்தலே நடைபெறும் – ஜனாதிபதி ரணில்
(Jaffna Tamil News) தேசத்திற்காக ஒன்றிணையும் நடவடிக்கை’ கொள்கை தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியது
பிரபலப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச பொதுத் திட்டங்களின் கீழ் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு முன்மொழியப்பட்டது.
அத்துடன், இரு தரப்புக்கும் இடையில் அரசியல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் தேர்தலுக்கு, இவ்வாறான குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தை அமுல்படுத்தக்கூடிய ஒரு கூட்டணி தேவை என பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அதற்கிணங்க தானும் அவ்வாறான யோசனைக்கு விருப்பம் உள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை மறுசீரமைப்பதற்காக மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் பொதுத் தேர்தலோ அல்லது சர்வஜன வாக்கெடுப்போ நடைபெறாது ஆனால் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் தேர்தலில் இவ்வாறான பொது வேலைத்திட்டங்கள் முன்வர வேண்டும் எனவும், தெரிவித்தார்.
நாட்டை கட்டுப்படுத்த. குடியரசு முன்னணி தலைவர்களின் யோசனைக்கும் ஜனாதிபதி
ஒப்புதல் அளித்தார்.
மேலும் கட்சி செயலாளர்கள் மூலம் இந்த விவாதங்களை தொடர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.