உலகம் ஒரு நாடக மேடை, துவாரகா பெயரில் வந்தவர் மாபெரும் நடிகை – தலைவரின் பெறாமகன் சொல்வது என்ன? (வீடியோ)

நேற்றைய தினம் துவாரகா பிரபாகரன் தனது இரண்டாவது ட்ரெயிலர் வீடியோவினை யூடியூப் சேனல் ஒன்றின் ஊடாக வெளியிட்டு இருந்தார்.

இந்த சம்பவங்களின் பின்னணியில் நடப்பது என்ன என்பது பற்றி டென்மார்க்கில் இருக்கும் தலைவர் பிரபாகரனின் பெறாமகன் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

இதில் கூறப்பட்ட கருத்தின் சாராம்சம் சிவகாசி படத்தில் வரும் ஒரு டயலோக்கான,

இந்த உலகம் ஒரு நாடக மேடை. இதில் நான் ஒரு நடிகன், நீங்கள் எல்லாமே நடிகர்கள், உசிரோட வந்து இருக்குறவே துவாரகா இவா உலக மகா நடிகை, இந்தா துவாரகாவை நேற்று போட்டி கண்டாரே இன்பத்தமிழ் வானொலி பாலசிங்கம் பிரபாகரன் இவர் தற்போதைய நடிகர் என்ற பொருள் படும் அளவில் அந்த பதிவு உள்ளது.

அந்த பதிவினை அப்படியே கீழே பதிவிடுகிறோம்,

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் மக்களே,

வணக்க நிகழ்வினை நாங்கள் நடத்துவதாக அறிவித்தவுடன், 27.11.2023 தோன்றி உரையாற்றிய பின்னர் இத்தனை மாதங்களாக “பாதுகாப்பு காரணமாக” ஒளித்துவைத்திருந்த “போலிப் பெண்ணை” மீண்டும் நேற்று (25.02.2024) அவசர அவசரமாக வெளியில் அழைத்து வந்து தமது ஊடகத்தில் நேர்காணல் / நாடகம் ஒன்றினை வழங்கியிருந்தனர்.

நேர்காணல் கண்டவர் உட்பட இந்த மோசடி குழுவினர் அனைவருமே இதுவரை காலமும் தனது அண்ணன் குடும்பத்தை என் சித்தப்பா குடும்பத்திற்கு பிடிக்காது என்பது போல பல கதைகளையும் பரப்பி வந்தனர்.

இதற்கு நேர்மாறாக “போலிப் பெண்” எங்கள் குடும்பத்துக்கு பெரியப்பா குடும்பத்தைப் பிடிக்காது என்பது போல கதைக்கவில்லை. என்னைக் “கார்த்திக் அண்ணா” என்றழைத்தது என் மனதை என்னவோ செய்தது என்பது உண்மை.

தன்னைப் போல நடிக்க வந்த பெண்ணை கூட தன் அண்ணனை தவறாக கதைக்க விடாது அவரினுள் புகுந்து என் தங்கை துவாரகா தான் இப்படி கதைத்தாரா என்று என்னை நினைக்க வைத்தது!

இந்த நேர்காணல் கண்டவர் முதல் கேள்வியை கேட்டதும் “கைதட்டல்” சத்தம் போடப்பட்டது. அதன் பின்னர் தான் போலிப் பெண் கதைக்கத்துவங்கினார்.

இது தெருவில் வித்தை காட்டுபவர்கள் “எல்லாரும் ஜோராக கைதட்டுங்கள்” என்று கைதட்ட வைத்து வித்தை காட்டத் துவங்குவதை அனைவருக்கும் கண்டிப்பாக நினைவுபடுத்தியிருக்கும்.

சித்தப்பா, சித்தி இருக்கும் போது ஏன் இவர் மட்டும் தோன்றிவருகிறார்? பாதுகாப்பாக இவரை அழைத்து வந்தவர்களால் சித்திக்கு பாதுகாப்பு கொடுத்து இவருடன் அழைத்துவர முடியாதா?
சித்தப்பா, சித்தியுடன் வந்தால் DNA பற்றிக் கதைக்க வேண்டிய அவசியமே இல்லையே!
பல அமைப்புகளுடன் தொடர்பு கொண்டதாக கூறியிருந்தார். பாதுகாப்பைப் பற்றி இவ்வளவு யோசிப்பவர் ஏன் தன்னைப் பற்றியும், சித்தப்பா, சித்தி பற்றியும் அருணா பெரியம்மாவை அறிவிக்க செய்தார்?

மருத்துவர் படிப்பு தபால் வழியில் படிப்பது முடியாத ஒரு விடையம். எந்த மருத்துவ கல்லூரியில் படித்தார்? மருத்துவராக எங்கு பயிற்சி செய்தார்? திரைக்கதையில் பல ஓட்டைகள் உள்ளன.

இதனை குடும்ப சண்டையாக யாரும் தயவு செய்து பார்க்க வேண்டாம். 20.10.2023வரை சிறீ மாமா, சாந்தி மாமியுடன் தொடர்பில் தான் இருந்தேன். (இதற்கான ஆதாரம் எனது அடுத்த பதிவில்)

முட்டாளாகவோ, மனநலம் பாதிக்கப்பட்டோ இருந்திருந்தால் கேள்விகள் கேட்காது சொல்வதையெல்லாம் நம்பியிருப்போமோ என்னவோ!

இவ்வாறு அந்த பதிவில் உள்ளது.

இது தொடர்பில் அவர் சொல்லும் கருத்து கீழ் உள்ள வீடியோவில் உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.