தன்னை கைது செய்தமைக்கு 10 கோடி இழப்பீடு கேட்கும் வேண்டும், கெஹலிய நீதிமன்றில் மனு!
குற்ற புலனாய்வு பிரிவு தன்னை கைது செய்தமைக்கு 10 கோடி ரூபா நஷ்டஈடு வழங்க கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
குற்ற புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்து, நியாயமான காரணம் இல்லாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து தனது உரிமை மீறப்பட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தரக்குறைவான இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் ஆறு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் துணையுடன் போலி ஆவணங்களை உருவாக்கி, தரமற்ற 22,500 இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை அந்த மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாக குற்ற புலனாய்வு துறை (சிஐடி) விசாரணையை தொடங்கியது.
விசாரணையில், தரம் அற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் 13 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.