அடுத்த வருடமும் எமது அராசங்கமே இருக்குமென ஜனாதிபதி அறிவிப்பு
⏩ அடுத்த ஆண்டும் இதே அரசாங்கம்தான் நாட்டில் இருக்கும்…
⏩ அரசின் மக்கள் பிரதிநிதிகள் கிராமத்திற்கு செல்லாவிட்டால் அரசு காணாமல் போகும்…
⏩ பணத்தை கிராமத்திற்கு கொண்டு சென்று கிராமத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்துங்கள்…
-கம்பஹா மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி உரை.
அடுத்த வருடமும் நாட்டில் இதே அரசாங்கம் அமையும் எனவும் அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் கிராமத்திற்கு செல்லாவிட்டால் அரசாங்கமே இல்லாமல் போகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இரண்டு வருடங்களின் பின்னர் அபிவிருத்திக்காக வழங்கப்படும் பணத்தை கிராமத்திற்கு எடுத்துச் சென்று கிராமத்தின் அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிக்குமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
கம்பஹா மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில்
இடம்பெற்ற சந்திப்பில் திடீரென கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் கம்பஹா மாவட்ட மொட்டுக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய மூன்று மாவட்டத் தலைவர்களும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
இதில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தவிர அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அரசாங்கத்தை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிசிர ஜயகொடி மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் வெளிநாட்டில் இருப்பதால் இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,
“1978 இல்தான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் வழங்கத் தொடங்கினர். அப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கடமையைச் செய்வதற்கு மூன்று இலட்சம் ரூபாய் கிடைத்தது. ஒரு கிராமத்தை அபிவிருத்தி செய்ய பணம் தேவை. குறிப்பாக இந்த வேலையை தங்கள் தங்கள் பகுதியில் தொடங்குங்கள்.
இங்கு பிரதேச மட்டத்தில் கிராமத்திற்கு செல்வது மட்டுமே நோக்கமாக உள்ளது. அன்று போக முடியவில்லை என்பதால், இப்போது கிராமத்திற்குச் சென்று வேலை செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. கிராமத்தை விட்டு யாரும் ஒதுங்கக் கூடாது.
கம்பஹா எங்கும் செல்லலாம், யாரும் செல்ல முடியாத இடம் இல்லை. பணத்தை எடுத்து செலவு செய்யுங்கள். ஓகஸ்ட் மாதத்திற்கு முன் பணத்தைச் செலவளித்து வேலையைத் தொடங்குங்கள்.
தள்ளிப் போட வேண்டாம். அடுத்த வருடம் பணம் தருவேன். அடுத்த ஆண்டும் இதே அரசாங்கம்தான். கிராமத்திற்கு செல்லாவிட்டால் அரசு காணாமல் போய்விடும்.
1970 இல் கம்பஹா மாவட்டத்தை உருவாக்கினோம். அதன்பின்னர் எந்த அரசாங்கம் வந்தாலும் கம்பஹா பெரிய முன்னேற்றம் அடைந்தது. இன்று அதிக மக்கள் தொகை கம்பஹா மாவட்டத்தில் உள்ளது.இது வேகமாக வளர்ச்சியடைந்தது.
1978 இல் இருந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கமும் அரசாங்கத்தை நிர்வாகம் செய்த கட்சிகளும் செய்தன. அதிலிருந்து விலகியிருந்தவர்கள் எதுவும் செய்யவில்லை. தொலைவில் இருந்தவர்கள் கம்பஹாவை கட்டி எழுப்பவில்லை.
இல்லை என்றால் இன்று தேங்காய், இறப்பர் மட்டும்தான் இருந்திருக்கும். அதையும் அந்த மக்களிடம்தான் கேட்க வேண்டும். நீங்கள் இணைப்பில்லாமல் இருந்திருப்பீர்கள்என்றால் என்ன நடந்திருக்கும்? இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டதால்.தான் கம்பஹா கட்டி எழுப்பப்பட்டது. அதை யாரிடமாவது கேளுங்கள்.
இரண்டு கட்சிகளும் இணைந்து செய்த பணிகளுக்கு கம்பஹா சிறந்த உதாரணம். எதுவும் செய்யவில்லை என்று மற்றவர்கள் கூறினால், கம்பஹாவுக்கு வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்றார்”.