அலரி மாளிகைக்குள் நுழைந்த இருவர் கைது!
கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி பயணம் செய்த இருவர் அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமையினால் கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஒருவரும், கடல் வணிகத்தில் ஈடுபடும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரவு விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கூகுள் மேப் மூலம் தாம் தங்கியிருக்கும் முஹந்திரம் வீதி விடுதிக்கு சென்றுள்ளனர்.
கூகுள் மெப் அலரி மாளிகையின் மதில் சுவர் ஒன்றை பயணத்தின் முடிவு புள்ளியாக காட்ட அங்கே பயணத்தை முடித்துக்கொண்ட சந்தேகநபர்கள் இருவரும் மதில் ஏறி அலரி மாளிகைக்குள் குதித்துள்ளனர்.
பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி காவல்துறையின் நடமாடும் சுற்றுலா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.