யாழில் 4 பிள்ளைகளின் தந்தை துாக்கிட்டு தற்கொலை!!
யாழ்ப்பாணத்தில் புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியில் கண் மற்றும் கால் வலி காரணமாக 65 வயதுடைய கோபால் புஸ்பராசா தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இவ்வாறு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சில காலங்களுக்கு முன் குறித்த நபர் கீழே விழுந்ததில் இரு கால்களிலும் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு கிளிப் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவருக்கு கண் வலியும் காணப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு வலிகளையும் தாங்க முடியாத நிலையில் அவரது வீட்டு மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு கொண்டார்.
குறித்தநபர் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இடையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்ட நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.