கிளிநொச்சியில் பாடசாலை விளையாட்டு போட்டி கொலையில் முடிந்தது!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியினை பார்த்துவிட்டு வீடு சென்ற போது கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் ஏற்பட்ட கைகலப்பின் போது கத்தி குத்துக்கு இலக்காகி தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதில் உயிரிழந்த 30 வயதுடைய சவரிமுத்து ஜோன் பற்றிஸ் என்பவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.