யாழில் ஒருவரை கொன்ற போலி வைத்திய சிகிச்சை நிலையம் இழுத்து மூடப்பட்டது!!

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் டினேஜ் என்ற போலி அங்கு பஞ்சர் வைத்தியரால் நடத்தப்பட்டு வந்த சிகிச்சை நிலையத்தை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி, உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட குழுவினர் நேற்று அந்த சிகிச்சை நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்த போது, எந்த பதிவும் மேற்கொள்ளாத சிகிச்சை நிலையமென்பதும், சிகிச்சையளித்தவர் எந்த மருத்துவ தகுதியை கொண்டிருக்காததும் தெரிய வந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்ற ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்திருந்தார்.

அச்சுவேலி, பத்தமேனியை சேர்ந்த ஒருவர் முழங்கால்களில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். வைத்தியசாலைக்கு செல்லலாமென குடும்பத்தினர் வற்புறுத்திய போதும், உயிரிழந்தவர் அதை பொருட்படுத்தாமல், பேஸ்புக் விளம்பரத்தில் பார்த்த இந்த போலி வைத்தியரிடம் சென்றுள்ளார்.

போலி வைத்தியர், அந்த நபரின் இரண்டு முழங்கால்களிலும் ஊசியால் குத்தியுள்ளார். இதனால் கிருமித்தொற்று ஏற்பட்டு, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.

இதை தொடர்ந்து, இந்த போலி வைத்திய நிலையம் நேற்று (5) ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

அங்கு சிகிச்சையளித்து வந்தவருக்கு ஆங்கில, அக்குபஞ்சர் வைத்தியத்தில் எந்த அங்கீகரிக்கப்பட்ட தகுதியும் இருக்கவில்லையென்பது தெரிய வந்தது. அவரது சகோதரியின் பெயரில் இந்த சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்ததும், 2 வருடங்களின் முன்னர் சகோதரி அந்த பதிவை மீள பெற்றதும் தெரிய வந்தது.

இதன்பின்னர், தற்போது சிகிச்சையளிப்பவர், அந்த அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தை பதிவு செய்ய முயன்ற போதும், தராதரத்தை பூர்த்தி செய்யாததால் பதிவு முயற்சி வெற்றி பெறவில்லை.

நேற்று ஆய்வு செய்த போது, அங்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஊசிகள் உரிய சுகாதர முறைப்படி சுத்தம் செய்யப்படவில்லையென்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த சிகிச்சை நிலையத்தை உடனடியாக மூடுமாறும், தராதரத்தை பூர்த்தி செய்து உரிய பதிவுகளை மேற்கொண்ட பின்னர் மீள திறக்குமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதன்போது, அங்கிருந்த போலி வைத்தியர், தான் சிகிச்சையை நிறுத்தினால், தன்னிடம் சிகிச்சை பெறும் 500 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்து விடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளை தனது சிகிச்சையைில் ஒருவரைக் கொலை செய்த பின்னரும் “அங்குபஞ்சர் வைத்தியரின் அதிர்ச்சி வாக்குமூலம்” என தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னைப் பற்றி பெரும் பணம் செலவு செய்து டினேஸ் தாறுமாறாக விளம்பரம் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.