10 கிலோ வெடிமருந்துடன் கிளிநொச்சி பூநகரியில் ஒருவர் கைது
கிளிநொச்சி – பூநகரி பகுதியில் 10 கிலோ சி – 4 வெடி மருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூநகரி பகுதியினை சேர்ந்த ஒருவர் மோட்டர் சைக்கிளில் ஆபத்தான வெடிமருந்தை கடத்தி செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை பொலிசார் மடக்கி பிடித்தனர்.
இதன்போது 10 கிலோ எடையுள்ள வெடிமருந்தினை மீட்டதுடன் குறித்த நபரை கைது செய்து பூநகரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.