விசேட அதிரடிப்படை சீருடையில் பாடசாலை மாணவர்கள்; ஒருவர் கைது
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் போன்று சீருடை அணிந்து T56 துப்பாக்கிகளை ஏந்தியவாறு கம்பஹா பிரதான பாடசாலையின் கடேட் குழுவொன்று அணிவகுப்பில் கலந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கம்பஹா தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அணிவகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பயன்படுத்திய அதே துணியினையே பயன்படுத்தி சீருடையை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த சீருடைகள் தைக்கப்பட்ட அநுராதபுரத்தில் உள்ள துணிக்கடையின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை கடேட்களுக்கு இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சீருடைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவம் அல்லது சிறப்புப் படைகளின் சீருடைகள் அனுமதிக்கப்படவில்லை. இது தவறான முன்னுதாரணமாகும். இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.