கல்முனையில் கறுப்பு சித்திரை போராட்டம்!
அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக பிரச்சினைகளை வென்று எடுப்பதற்காக 21வது நாளாகவும் போராட்டம் கறுப்பு சித்திரை எனும் பெயருடன் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இளைஞர் கழகங்கள் விளையாட்டு கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புகளுடன் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிள் பவணி ஒன்று பிரதேச செயலக முன்றலில் இருந்து ஆரம்பமாகி மணல் சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியன் மேடு, துறைநீலாவணை, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை நகரப்பகுதி ஊடாக சென்று மீண்டும் பிரதேச செயலக முன்றலை வந்தடைந்தது.
இதன்போது, பல கோஷங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், பிரதேச செயலகத்தின் முன்பாக கறுப்பு பொங்கல் பானையில் இடப்பட்டு பொங்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார், நீதிமன்ற கட்டளைப்படி பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் பொதுசொத்துக்கள் சேதமாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்காக போராட்டக்காரர்கள் என மூவரின் பெயரை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை வழங்கினர்.
இதனால், அங்கு சிறு பதற்றம் எற்பட்டது. பின் பிரதேச செயலகம் மீது திணிக்கப்படும் நிருவாக அடக்கு முறைக்கும், அத்துமீறல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென கறுப்பு சித்திரையாக பிரகடனம் செய்யப்பட்டது.