முஸ்லிம் தீவி*ரவாதிகளே ஈஸ்டர் தாக்குதலை நடத்தினார் என்பது உறுதி – சொல்கிறார் சரத்
2019ம் ஆண்டு ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் சம்பவம் குறித்து மூன்று சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நடத்தியதாகவும் இதற்கு முஸ்லிம் தீவிரவாதிகளே காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அருட்தந்தை சிறில் காமினி சனிக்கிழமை (20) வெளியிட்ட கருத்துக்கு, சரத் வீரசேகர பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
தாக்குதலுக்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
சஹாரானை கைது செய்ய சொன்னோம் – செய்யவில்லை. நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம் வாக்குகளுக்கு ஆதரவாக இருந்தது.
ஜே.வி.பி உறுப்பினர்கள் கர்தினால் சந்திக்க சென்றனர். இதன் முக்கிய குற்றவாளி யார் என
ஜே.வி.பியினர் , இப்ராகிமிடமே கேட்க வேண்டும். அவரின் இரண்டு மகன்களும் தற்கொலை குண்டுதாரிகள் என்பதால் அவருக்கு பதில் தெரிந்து இருக்கும். அவர்கள் அறியாதவர்கள் அல்ல.
சிங்கள பௌத்தரை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக அவர்கள் தமது உயிரை தியாகம் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. இது தொடர்பாக 3 சர்வதேச புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தியுள்ளது.
முக்கிய மூளையாக செயல்பட்டவர் நௌபர் மௌலவி. அவர் தற்போதும் சிறையில் இருக்கின்றார்.
நியூசிலாந்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டமையால் இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் தாக்கப்பட்டன.
அவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தாமதம் நீதிமன்றத்தில் உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் 23,000 குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக 12 உயர்நீதிமன்றங்கள் விசாரணை நடத்தி வருகின்றன. அருட்தந்தை சிறில் காமினி சொன்னது புதிதாக இருந்தால். இதுகுறித்து சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தத் தகவலைத் தருவதில் தாமதம் ஏற்படுவதும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது.